என்னது ஷகீலா இறந்துட்டாரா..? – ரசிகர்கள் அதிர்ச்சி

225
Shakila
Advertisement

நடிகை ஷகீலா இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டு தீயாக இணையத்தில் பரவியதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தவர் நடிகை ஷகிலா. அவர் படம் ரிலீஸாகிறது என்றால் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தனது தனி திறமையால் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார். ரசிகர்கள் அவரை அன்போடு ‘அம்மா’ என்று அழைக்கிறார்கள்.

Advertisement

இந்நிலையில் ஷகீலா இறந்துவிட்டார் என்கிற தகவல் காட்டு தீயாக பரவியதால் அவரது ரசிகர்கள் பதட்டம் அடைந்தார்கள். இதனையடுத்து நடிகை ஷகீலா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார்.

அந்த வீடியோவில் ஷகீலா கூறியிருப்பதாவது, நான் இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், சிரித்த முகமாகவும் இருக்கிறேன். யாரோ என்னை பற்றி வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.

அதே சமயம் வதந்தியை பரப்பியவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஷகீலா தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.