‘நல்லெண்ணெய் சித்ரா’ மரணம்

263
chitra
Advertisement

திரைப்பட நடிகையும் நல்லெண்ணெய் விளம்பரத்தில் மிகப் பிரபலமானவருமான சித்ரா, மாரடைப்பால் காலமானார்.

56 வயதாகும் சித்ரா, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொச்சியில் பிறந்து,  குழந்தை நட்சத்திரமாக, ரஜினியின் அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தில், அறிமுகமானவர் நடிகை சித்ரா. பிறகு, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

Advertisement

மலையாளத்தில் மோகன்லால், பிரேம் நசீர், தமிழில் சரத்குமார், கமல், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சித்ரா, சென்னை சாலிகிராமத்தில், கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

ராஜபார்வை, சின்னப்பூவே மெல்லப்பேசு, சேரன் பாண்டியன் , சின்னவர், மனதில் உறுதி வேண்டும் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்து விருதுகளைப் பெற்றுள்ளார் நடிகை சித்ரா.

நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல மெகா தொடர்களில் நடித்துள்ளார் சித்ரா.

ஆனால், நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததன் மூலம், பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு, திரைத்துறையினர் பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.