கேஜிஎப் 2 ட்ரைலர் வெளியீடு மேடையில் விஜயின் பீஸ்டுக்காக பேசிய நடிகர் யஷ்

414
Advertisement

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், கேஜிஎப் 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இணையத்தில் இந்த டிரெய்லர் குறித்துதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தசூழலில், கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியீடு விழாவில், நடிகர் விஜய் குறித்து நடிகர் யஷ் பேசியுள்ளார்.

அதில், அவர், இது தேர்தல் அல்ல, சினிமா. இது கேஜிஎப் VS பீஸ்ட்க்கான போட்டி அல்ல. நடிகர் விஜய் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, கண்டிப்பாக பீஸ்ட் படத்தை பார்ப்பேன். விஜய் சாரின் ரசிகர்கள் கண்டிப்பாக கேஜிஎப் இரண்டாம் பாகத்தை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.