பிரபல தயாரிப்பாளர் மீது நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு

295
Advertisement

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியானது.

இந்த மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மேலும் சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.