நடிகர் பிரபுதேவாவின் அடுத்த பட அப்டேட்

560
prabhu-deva
Advertisement

நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்தில் புதுச்சேரி நடிகர்கள் பங்கேற்ற நடன காட்சி கடற்கரை சாலை அருகே படமாக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி நடன இயக்குனரும் திரைப்பட நடிகருமான பிரபுதேவாவின் புதிய திரைப்படம் புதுச்சேரியில் தொடர்ந்து கொரோனா விதிமுறைகளின் படி படமாக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் கல்யாண் தனது ஆறாவது படத்தை பிரபு தேவாவை வைத்து இயக்கி வருகிறார்.

Advertisement

அதன் படப்பிடிப்பு கடற்கரை சாலை அருகே நடைபெற்று வருகிறது.

இதில் பிரபுதேவா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இடம்பெறும் நடன காட்சியில் புதுச்சேரி நாடக நடிகர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட பல்வேறு வேடமணிந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.