நடிகர் பிரபாசுக்கு ஸ்பெயின் நாட்டில் சர்ஜரி நடக்கிறது

285
Advertisement

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘சலார்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வந்தார் . இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக பிரபாஸ், அடிபட்டு காயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆபரேஷன்’ செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் . ஓய்வு எடுக்க முடியாத அளவுக்கு படங்கள் இருந்ததால், பிரபாஸ் அப்போது சர்ஜரி செய்து கொள்ளவில்லை. நேற்று திடீரென வலி அதிகமானதால் , டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் வெளிநாடு சென்று ‘ஆபரேஷன்’ செய்துகொள்ள முடிவு செய்தார்.அதன்படி பிரபாஸ் நேற்று ஸ்பெயின் நாட்டுக்கு சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடக்கிறது.