நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படுமா ?

349
Advertisement

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு ஒன்றும் புதிது இல்லைதான். சமீபத்தில் ‘அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயாராகிறார் என்றே நினைக்கின்றேன்’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அதற்க்கு ஆதாரமாக அஜித்தின் வலிமை படம் ரிலீஸ் ஆன தேதியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளோடு ஒப்பீடும் செய்திருந்தார். இது மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது . இந்நிலையில் அஜித்தின் தரப்பிலிருந்து வெளியான ட்விட்டர் பதிவில் , “அஜித் குமாருக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது . அதுபற்றிய தவறான தகவல்கள் பரவுவதை ஊடகத்தினர் ஊக்கப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிவின் மூலம் அஜித்தின் அரசியல் நிலைப்பாடு பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement