திருச்சியில் நடிகர் அஜித் – ரசிகர்கள் மகிழ்ச்சி

158

திருச்சியில் தன்னை காண திரண்டிருந்த ரசிகர்களை நடிகர் அஜித் சந்தித்ததால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 47வது மாநில துப்பாக்கி சுடும் போட்டிகள் திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடிகர் அஜித்தும் பங்கேற்றுள்ளார். அஜித்தின் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள், ஏராளமானார் அங்கு திரண்டனர். இதையடுத்து நடிகர் அஜித் கட்டிடத்தின் மாடியில் நின்று ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். இதைதொடர்ந்து இரவிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அஜித் அங்கிருந்து வெளியே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. போலீசார் அறிவுறுத்தியும் ரசிகர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் நடிகர் அஜித்தை பின்பக்க கதவு வழியாக அனுப்பி வைத்தனர்.