வன்முறையின் போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

141

வன்முறையின் போது கனியாமூர் பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோர மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி இறப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையின் போது, பள்ளியில் இருந்து பல பொருட்களை போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில், கனியாமூர் பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோர மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.