புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

44

தமிழகத்தில் இன்று முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை மறுநாள் அதாவது 16 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணித்துள்ளது. இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் நாளை மறுநாள் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது வங்கக்கடலின் மத்திய மேற்கு, தெற்கு பகுதியில் அந்தமான் அருகே வலுவடைய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெறுமா என்பதை கணிகாணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரத்தால், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. தற்போது அது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக வலுவிழந்து, அரபிக்கடல் நோக்கி நகர்ந்து மறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் என்று கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் நாளை மறுநாள் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது வங்கக்கடலின் மத்திய மேற்கு, தெற்கு பகுதியில் அந்தமான் அருகே வலுவடைய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெறுமா என்பதை கணிகாணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.