நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்

161
accident
Advertisement

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் பசுபதி.

இவர் தனது அக்கா வீட்டிற்கு சென்று தனது மனைவி மற்றும் அக்காவுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற மினி லாரி ஓட்டுநர் திடீரென வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

Advertisement

இதனால் நிலை தடுமாறிய  பசுபதியின் இருசக்கர வாகனம் மினி லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயெ 3 பேரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய மினி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.