கேவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர், தனது மருமகன் வாங்கிய புதிய காரில் தனது பேரன் நகுலை ஏற்றிக்கொண்டு காரை இயக்கியுள்ளார்.
அந்த கார் ஆட்டோமெட்டிக் கியர் வசதி கொண்டது என்பதால், பின்நோக்கி செல்வதற்கு கியர் விழுந்துள்ளது.
இதை அறியாமல் ஈஸ்வரன் காரை இயக்கியதால், கார் பின்னோக்கி வேகமாக சென்று அங்கு இருந்த கிணற்றின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தது.
40 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்த கார், சுக்குநூறாக நொறுங்கியது.
சத்தம் கேட்டு ஒடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் காருக்குள் இருந்த ஈஸ்வரன் மற்றும் நகுலை மீட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஈஸ்வரன் உயிரிழந்த நிலையில், சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான்.