சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதி  பெண் பலி

36

தாம்பரம் அருகே, சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி, பெண் தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அவர் உயிரிழந்தார்.சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வனஜா.

இவர், தாம்பரம் அடுத்த முடிச்சூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார்.

Advertisement

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனம், வனஜா மீது மோதி அவரை தூக்கி வீசியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.