உலக பால் தின விழாவை முன்னிட்டு தமிழக பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சார்பில், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு, சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆவின் நிறுவனம் எவ்வித ஹெல்த் மிக்கசும் தயாரிக்கவில்லை என்று தெரிவித்தார்.