தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை சாலை மணிமண்டபம் அருகே உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவசர தேவைக்காக ஸ்கேன் செய்ய வந்தவர்களுக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மையத்திற்கு வரும் வருமானம் முறையாக கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தனியார் ஸ்கேன் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதேபோல், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காமராஜர் நகரில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
4 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.