முதுமலையில் சாரல் மழையில் நனைந்தபடி குட்டியுடன் உலா வந்த காட்டு யானையை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று மாலை பெய்த நிலையில், யானை ஒன்று தனது குட்டியுடன் சாரல் மழையில் நினைந்தபடி சாலை கடந்து சென்றது.
இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்த நிலையில், மழையால் முளைத்த புதிய வகை செடிகள் மற்றும் தாவரங்களை மான் மற்றும் குரங்குகள் உணவாக அருந்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.