திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது

69

உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அம்ரோஹா  மாவட்டத்தில் இரண்டு சகோதரிகளக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.

பல வகை உணவுகள் பரிமாறப்பட்டு மிக ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை காண்பிக்க சொல்லி கேட்டதால் திருமணத்திற்கு வந்த பலர் மண்டபத்திற்குள் நுழைய முடியாமல் செல்லும் சூழல் உருவானது.