வத்தலகுண்டு அருகே, வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்…

140
Advertisement

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி.

இவர் ஈச்சர் சரக்கு வாகனத்தில் காய்கறி ஏற்றிக்கொண்டு, வத்தலகுண்டு அடுத்த கணவாய்ப்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது ஈச்சர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வேந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்.

அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம், மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதிய நிலையில், சாலையில் நின்று கொண்டிருந்த  ஜீப் மீது ஈச்சர் சரக்கு லாரி மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.