2024இல் புதிய வைரஸ் ?

37
Advertisement

உலகில் விசித்திரமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.சிலர் தங்களை காலாப்பயணி என்றும், எதிர்காலத்தை கணிக்கக்கூடியவன் என்பது போல கூறுவதை பார்க்கிறோம்.

இந்த வரிசையில், டிக்டாக்கில் தன்னை நேரப் பயணி என்று வர்ணித்துக் கொள்ளும் ஒருவர், வரும் 2024-ம் ஆண்டு மற்றொரு ஆபத்தான மற்றும் மர்மமான வைரஸ் வந்து இந்த உலகம் முழுவதையும் தாக்கும்  என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் ,  ‘ஜாக்கிரதையாக இருங்கள்! சிலர் என்னை நம்பாவிட்டாலும், நான் 2096 ஆம் ஆண்டில் இருக்கும் ஒரு காலப் பயணி என்றும் 2022 ஆம் ஆண்டில், யுஎஃப்ஒக்கள் தொடர்பான சில ஆவணங்களை அமெரிக்கா உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும்.

அதே நேரத்தில், 2023 இல், பூமிக்கு அடியில் மிகப்பெரிய உயிரினம் கண்டுபிடிக்கப்படும். 2024 ஆம் ஆண்டில், ஆபத்தான மற்றும் மர்மமான வைரஸ் உலகம் முழுவதும் பரவும் என கூறியுள்ளார்.தற்போது இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி , நெட்டிசன்கள் வேடிக்கையான  கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.