டெல்லியில் விபத்தில் பலியானவரின் உடல் காரின் மேற்கூரையில் விழுந்த நிலையில், அந்த உடலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று ரோட்டோரம் வீசியவர்களை போலீசார் கைது செய்துள்ள பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது…

119
Advertisement

டெல்லி கன்னாட்பிளேசை ஒட்டியுள்ள கஸ்தூரிபா காந்தி ரோடு சந்திப்பில் நள்ளிரவு நேரத்தில் ஒரு விபத்து நடந்தது.

அதில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பைக்கில் வந்த ஒருவர் ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். மற்றொருவர், விபத்தை ஏற்படுத்திய காரின் மேற்கூரையில் விழுந்து உயிரிழந்து விட்டார். இந்த  விபத்தை ஏற்படுத்திய கார் அங்கு நிற்கவில்லை. வேகமாக அங்கிருந்து சென்றது. இதை முகமது பிலால் என்பவர் கவனித்து, தனது ஸ்கூட்டரில் அந்த காரை பின்தொடர்ந்தார். சத்தம்போட்டு அலறி காரை நிற்க சொன்னார். ஆனால் கார் நிற்கவில்லை.

இதனால் அவர் காரின் மேற்கூரையில் விபத்தில் பலியானவரின் உடலோடு சேர்த்து கார் செல்வதை வீடியோ படம் எடுத்தார். இதற்கிடையே, கார் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கடந்து இந்தியா கேட் அருகே சென்றுவிட்டது. அங்கு ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் சாலையோரம், உடலை தூக்கி வீசிவிட்டு காரில் இருந்தவர்கள் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தின் தகவலை அறிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு விபத்து ஏற்படுத்தி, இறந்த உடலை தூக்கி வீசிய ஹர்னீத் சாவ்லா மற்றும் அவருடைய குடும்பத்தினரை கைது செய்தனர்