நண்பர்களுடன் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

81

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஓசூர் மாநகராட்சி கணபதி நகரைச்சேர்ந்த திருப்பதி என்ற மாணவன், காலாண்டு விடுமுறையையொட்டி, நண்பர்களுடன் ராமநாய்க்கன் ஏரி அருகேயுள்ள கோயில் தெப்பக்குளத்தில் குளிக்க சென்றான்.

ஆனால், குளத்தில் இறங்கிய மாணவன் திருப்பதி மீண்டும் வெளியே வராததால், சக நண்பர்கள் பதற்றம் அடைந்தனர். இது குறித்து உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் குளத்தில் இறங்கிய திருப்பதியை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.