நூறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் “லோப்ஸ்டர்”

561
Advertisement

அமெரிக்காவில் மீனவர் ஒருவர் நடுக்கடலில்  கடல் நண்டு வகை எனப்படும் ராட்சத “லோப்ஸ்டர்” ஒன்றை பிடித்துள்ளார்.இதில் சுவாரசியம் என என்றால் இந்த லோப்ஸ்டரின் வயது 100 என கூறுகிறார் இந்த மீனவர்.

பிடிபட்ட அந்த ராட்சத “லோப்ஸ்டர்” உடன் எடுக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.அதில் இந்த லோப்ஸ்டர் 100 ஆண்டுகள் பழமையானது என்றும்  இது தனது முன்னோர்களால் பிடிக்கப்பட்டிருக்கலாம்,இதுவே நாங்கள் பிடித்ததில் மிகப் பெரிய லோப்ஸ்டர் என விவரிக்கிறார்.

தகவலின் படி, அந்த பகுதியில் பாதுகாப்படவேண்டிய கடல்வாழ் உயிரினத்தில்  லோப்ஸ்டரும் இருப்பதால்,இதை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளூர் ஊடகங்களில்  பேசும் பொருளாகி உள்ளது.