மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவரை, கண்மூடித்தனமாக தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

132

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவரை, கண்மூடித்தனமாக தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவரை, காவலர் ஒருவர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முதியவரை காலில் மிதித்த காவலர், பின்னர் அவரை ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்கவிட்ட காட்சிகள் வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் முதியவரை தாக்கிய ரயில்வே காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.