மார்க்கெட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

47

பாரிசீன் மிகப்பெரிய உணவு பொருட்கள் வழங்கும் மார்க்கெட்டில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசீன் அதிகளவில் உணவு பொருட்கள் வழங்கும் ருங்கிஸ் மார்க்கெட்டில் உள்ள மார்க்கெட்டில், எதிர்பாராதவிதமாக கடும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பாரீஸ் முழுவதும் கரும்புகை சூழ்ந்து, புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த கிடங்கில் தான் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள், கடல் உணவுகள், பால்பொருட்கள் மற்றும் பூக்கள் சேமித்துவைக்கப்படும்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், அங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் ஏற்பட்ட உயிர்சேதங்கள் இருந்து தகவல்கள் வெளியாகாத நிலையில், மார்க்கெட்டில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement