பட்டாசு தயாரிப்புபோது நேர்ந்த விபத்தில் பரிதமாக போன உயிர்

281

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த பூசாரித்தேவன்பட்டி பகுதியில் தகர செட் அமைத்து அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல தீக்காயங்களுடன் இருந்த நாகராஜ், திருப்பதி ஆகிய இருவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் 80 சதவீத காயங்களுடன் பாதிக்கப்பட்டிருந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் திருப்பதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த நாகராஜூம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.