அரசு பேருந்தில் இசை கருவியுடன் பயணித்த கல்லூரி மாணவியை, அவதூறாக பேசி நடுரோட்டில் இறக்கிவிட்ட நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…

164
Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி, நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று, கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக, சிவகங்கையில் இருந்து இசைக்கருவிகளை கல்லூரிக்கு கொண்டு சென்றுள்ளார். கல்லூரியில் ஆண்டு விழா முடிந்ததும், மாணவி மீண்டும் இசைக்கருவிகளுடன் ஊருக்கு புறப்பட்டுள்ளார். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மதுரை செல்லும் பேருந்தில் மாணவி பயணம் செய்துள்ளார்.

பேருந்து சிறிது தூரம் சென்றதும் மாணவியிடம் டிக்கெட் வாங்க வந்த நடந்துநர், இசைக்கருவிகளை பேருந்தில் கொண்டு செல்வது குறித்து மாணவியை அவதுறாக பேசியுள்ளார். மேலும் மாணவிக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததுடன், வண்ணார்பேட்டை பகுதியில் மாணவியை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.