கோவையில் தீ அணைப்பான் உருளை வெடித்து சிதறியதில் கல்லூரி மாணவன் கால் முறிவு ஏற்பட்டது…

31
Advertisement

கோவை மாவட்டம் குனியமுத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் 2 ஆண்டு படித்து வரும் மாணவன் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்.

இவர் இருசக்கர வாகனத்தில் குனியமுத்தூரில் இருந்து பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, குமார் என்பவரின் பழைய இரும்பு கடையில் வைத்திருந்த தீ அணைப்பான் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவனின்  காலில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து படுகாயமடைந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.