திருவண்ணாமலை  அருகே, கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது….

36
Advertisement

பெங்களூரை சேர்ந்த ராமநிதி – அஞ்சலை தம்பதியின் மூத்த மகள் கோதை லட்சுமி என்பவர், திருவண்ணாமலை  அடுத்த சோமாசிபாடி பகுதியில் உள்ள கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கோதைலட்சுமி இரவு தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கோதை லட்சுமியின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி கோதை லட்சுமி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.