மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசிருல்லா.
தினசரி கூலித் தொழிலாளியான இவரது கணக்கில்,100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனதால் அதிர்ச்சியில் உறைந்தார். இதனையடுத்து அவரது வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் திடீரென பணம் சேர்ந்தது தொடர்பாக வருகின்ற 30ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி முகமதுவுக்கு, சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.
வங்கி கணக்கில் வெறும் 17 ரூபாய் மட்டுமே வைத்திருந்த நிலையில், கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வங்கி கணக்கு நிறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.