இந்தியாவின் உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை உள்கட்டமைப்பு தரத்திற்கு ஏற்ப இந்திய சாலை உள்கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்திய உள்கட்டமைப்பில், சாலை கட்டுமானம், நதி இணைப்பு, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, வாகனங்கள் நிறுத்தும் வளாகம், நீர்ப்பாசனம், பேருந்து நிலையங்கள், கேபிள் கார் திட்டங்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2 லட்சம் கோடியில் 26 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களை உருவாக்கி வருவதாக கூறிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, பல புதுமையான யோசனைகள் மூலம், உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.