குண்டு வெடிப்பில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

65

மியான்மர் சிறையில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.  மியான்மரின் 2-வது மிகப்பெரிய நகரமான யாங்கூனில்  உள்ள சிறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், கைதிகள் மனிதாபிமான மற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சிறையில் தபாலில் வந்திருந்த 2 பார்சல்களை அங்கிருந்த சிறை ஊழியர்கள் பிரித்து பார்த்தபோது, அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இந்த குண்டு வெடிப்பில் சிறை ஊழியர்கள் 3 போ் மற்றும் கைதிகளை பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் 5 பேர் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனிடையே சிறையில் குண்டு வெடித்தது குறித்து தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து சிறை முழுவதையும் சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

Advertisement