அவெஞ்சர்ஸ் படம் போல் கே.ஜி.எப் 3 தயாரிப்பாளர் கொடுத்த செம்ம அப்டேட்

336
Advertisement

கே ஜி எப் படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுமே பான் இந்தியா அளவில் கவனம் பெற்ற நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளர் படத்தின் மூன்றாம் பாகத்தைப் பற்றி ஒரு செம்மையான அப்டேட்யை கொடுத்துள்ளார்.

இப்படம் 1000 கோடி வசூல் அடைந்த 4 வது இந்தியப் படம் ஆகும் ,எனவே இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் ,கதாநாயகன் யாஷ் போன்றவர்கள் படத்தின் வெற்றிக்குப் பிறகு தங்களின் சம்பளத்தைப் பல கோடிக்கு உயர்த்தியுள்ளனர், உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியானது , அதன்படி வெளியான ஒரே மாதத்தில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து போஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தின் இறுதியில் அதன் 3-ம் பாகம் உருவாகும் என்பதைக் கூறி இருந்தனர்.

Advertisement

எனவே ரசிகர்களின் வரவேற்பை மிகுதியாகப் பெற்ற இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கு, எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது ,தயாரிப்பாளர் விஜய் கிரிகந்தூர் சமீபத்திய ஒரு பேட்டியில், கே.ஜி.எஃப். 3 படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது ,மேலும் ஹாலிவுட்டில் உருவாக்கப்படும் அவெஞ்சர்ஸ் பட வரிசைகளைப் போல் கே.ஜி.எப் படத்தையும் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக உருவாக்க உள்ளதாக அவர் கூறி உள்ளார். இச்செய்தி ரசிகர்களை மிகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது.