461
Advertisement

விஜய் படத்தில் நடித்த Don இயக்குநர்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது நடிப்பில் உலகம் முழுவதும் மே 13 தேதி திரையரங்குகளில்  வெளிவந்த படம் டான்,  இப்படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் அவர்களின் படத்தில் நடித்துள்ளாராம்.

டான் படம் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது பல யூடியூப் சேனல்கள்  படத்தின்  ரீவ்யூவை  பற்றிக் கேட்கும்போது, மக்கள் பெரும்பாலும் படம் மிகவும்  நன்றாகவுள்ளது  என்றுதான்  சொன்னார்கள் .

இப்படத்தின் பாடல்கள் முன்னதாகவே இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளது, இதுவும் இப்படத்தின்  வெற்றிக்கு  ஒரு முக்கிய காரணமாகவுள்ளது , தனது முதல் படத்திலேயே வெற்றி பெற்ற டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குநர் அட்லீ அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

அதிலும் டான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பிரபலம் ஆகியுள்ளதால், மெர்சல் படத்தில் இவர் ஒரு காட்சியில் வருவது தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது, அதில் விஜய் அவர்களைக் கேள்வி கேட்கும் பத்திரிகையாளராக வருகிறார். இப்படிப் படி படியாக முன்னேறி , தற்போது முதல் வெற்றியை அடைந்து இருக்கிறார், ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னால்  சொல்லப்படாத பல கஷ்டமான கதைகள் இருக்கும் ,எனவே கஷ்டங்களை வருவதே நமக்கு வெற்றியைத் தருவதற்குத்தான் , என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.