தேனி மாவட்டம் சுருளி அருவியில், 3 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்….

22
Advertisement

சுருளி அருவியில் குளிப்பதற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென கன மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். சுருளி அருவியில் 3 நாட்களுக்கு பின்னர் நீர்வரத்து குறைந்தால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று அனுமதி அளித்துள்ளனர்.