சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5  விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றன

95

சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5  விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றன. மேலும் 20 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு 8 மணியில் இருந்து, சூறைக்காற்றுடன், இடி மின்னல், பலத்த மழை கொட்டியதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 186  பயணிகளுடன் துபாயிலிருந்து சென்னை வந்த எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதேபோல் இருந்து பக்ரையினிலிருந்து 167 பயணிகளுடன் சென்னை வந்த ஃகல்ப் ஏர்வேஸ் விமானம், ஹாங்காங்கிலிருந்து 204 பயணிகளுடன் வந்த கேத்தே பசிபிக் விமானம் மற்றும் மும்பை, லக்னோவிலிருந்து வந்த விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் மதுரை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, திருச்சி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டு தாமதமாக தரையிறங்கின.

Advertisement

இதை போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னையில் நேற்றிரவு மட்டும் 20 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.