பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசார் உயிரிழப்பு

162
death
Advertisement

அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. அசாம் மாநிலத்தின் எல்லையான கொலாசிப் மாவட்டம் மற்றும் மிசோரம் மாநில எல்லையான சச்சார் மாவட்டத்தில் அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், அசாம் மாநிலம் குலிசெர்ராவின் எல்லையோரப்பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில், பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசார் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து அசாம் – மிசோரம் மாநில எல்லையில் குண்டுவெடிப்பும் நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எல்லையில் நடந்த வன்முறை தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களும் டுவிட்டரில் வீடியோக்களை பதிவு செய்து, கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

Advertisement

மேலும், இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டேக் செய்து, இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.