ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து 46 ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
முழு ஆப்கானிஸ்தானையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சர்வதேச எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த 5 ராணுவ அதிகாரிகள் உள்பட 46 வீரர்கள் தங்களது நாட்டில் தஞ்சம் புகுந்து அடைந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.