வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் இருந்து 4 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினர். உயிர் பயத்துடன், உணவு, தண்ணீர் இன்றி தவித்ததாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்….

18
Advertisement

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அம்மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வன்முறையில் 60 பேர் உயிரிழந்ததாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 700க்கு மேற்பட்ட வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக மாறியுள்ளனர். வன்முறை காரணமாக மணிப்பூரில் உள்ள பிற மாநில மக்களை, அந்தந்த மாநில அரசுகள் மீட்டு வருகின்றன.

அதன்படி, மணிப்பூரில் இருந்து 4 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாணவர்கள், தங்கள் கல்லூரியின் வாசலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாக தெரிவித்தனர். இதனால் ஒரு வாரமாக உயிர் பயத்துடன், உணவு, தண்ணீர் இன்றி தவித்ததாக, மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.