கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக மேலும் 4 பேர் கைது

21

கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, வாட்ஸ்-அப் குழுக்களின் அட்மின்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டுவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, வாட்ஸ்-அப் குழுக்களின் அட்மின்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதாக புதுபல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

Advertisement