உத்தரபிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்

184

உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். எட்டாவா  மாவட்டத்தின் சந்திரபுரா கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக  வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த 4 குழந்தைள்  உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய மேலும் ஒரு குழந்தை மற்றும் ஒரு மூதாட்டியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்