63 ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிய நபர்-அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் 

89
Advertisement

ராஜஸ்தானின் ஜோத்பூரில் 36 வயதுடைய நபர் ஒருவர் 63 “ஒரு ரூபாய்” நாணயங்களை விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது.கடுமையான வயற்று வலியில் அவதிப்பட்டு வந்த அவர் ஜூலை 27 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் உலோக கட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின் எக்ஸ்ரே செய்து பார்த்ததில், 63 “ஒரு ரூபாய்” நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.எம்.டி.எம் மருத்துவமனையின் மருத்துவர்கள் ‘எண்டோஸ்கோபிக் செயல்முறை’ உதவியுடன்  இரண்டு நாட்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அந்த நாணயங்களை அகற்றினர் மேலும்  அவர் மனச்சோர்வு நிலையில் பொருட்களை உண்ணும் பழக்கம் கொண்டிருப்பதால்  மனநல சிகிச்சைக்கு பரிந்துரைத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

Advertisement