திண்டுக்கல் அருகே, காரும் லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்…

151
Advertisement

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த ரபிக் என்பவர்  தனது நண்பர்களுடன் மூணாறு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

வத்தலகுண்டு அருகே சென்றபோது, கேரளாவிலிருந்து டீத்தூள் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரியும் –  காரும் நேருக்குநேர் மோதின. இந்த விபத்தில், காரில் பயணித்த ரபிக், சமீரா பானு, வீரமணி  ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு சென்ற  போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.