திருச்சி அருகே, அரசுப் பேருந்து தடுப்பு சுவரில் மோதிய விபத்தில்  3 பயணிகள் படுகாயமடைந்தனர்…

33
Advertisement

திருச்சியிலிருந்து தேவகோட்டை நோக்கி 38 பயணிகளுடன் அரசுப்பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

செம்பட்டு அருகே சென்றுபோது கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து தடுப்பு சுவர் மீது மோதியது. இதில்  3 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.