3 டெல்லி மாநகராட்சிகள் ஒன்றாக இணைகிறது

423
Advertisement

3 டெல்லி மாநகராட்சிகளை ஒன்றாக இணைக்கும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

டெல்லி மாநகராட்சி 2011 ஆம் ஆண்டு வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அப்போதுமுதல் 3 மாநகராட்சிகளையும் பாரதிய ஜனதா கட்சியே கைப்பற்றி வருகிறது.

என்றாலும், 3 மாநகராட்சிகளிலும் வருவாயில் ஏற்றத்தாழ்வு உள்ளது. வார்டுகளும் சமமாகப் பிரிக்கப்படவில்லை. நிதித் தட்டுப்பாடு காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கத் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைப்பதற்கான டெல்லி மாநகராட்சி சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை மார்ச் 21ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், டெல்லி 3 மாநகராட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் சட்டத் திருத்த மசோதா 2022ஐ மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார்.