Advertisement

அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது நிலைதடுமாறி வந்த லாரி ஒன்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மோதியது.

இதில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ஓட்டுனர் குடிபோதையிலோ, அல்லது தூக்க கலக்கத்திலோ இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

லாரி பதிவு எண்ணைப் பயன்படுத்தி உரிமையாளரைக் கண்டுபிடித்த போலீசார், அவரிடம் இந்த சம்பவம் குறித்தும், ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.