மேலாடையின்றி ஓடிய பெண் – கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு

36
Advertisement

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அரை நிர்வாணமாக ஓடிவந்து, பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் திடீரென பெண் ஒருவர் தன்னை அரை நிர்வாணப் படுத்திக் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

அவர் உடலில் எங்களை கற்பழிப்பதை நிறுத்துங்கள் என்ற வாசகத்தை எழுதியபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷ்ய படையினர் அங்குள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தான் அந்தப் பெண் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.