மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, நடைபெற்ற சோதனை – கட்டுக்கட்டாக 20 கோடி பறிமுதல்

173

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, நடைபெற்ற சோதனையில் அமைச்சரின் உதவியாளரிடமிருந்து கட்டுக்கட்டாக 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஊழல் தொடர்பாக அம்மாநிலத்தின் இரு அமைச்சர்கள் உள்ளிட்ட மூவரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளரிடமிருந்து கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது