வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

41

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் சக்திநாதன். பட்டதாரி இளைஞரான இவர், ஆன்லைனில் வேலைக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சக்திநாதனின் முகவரியை இணையத்தில் பெற்ற மர்மநபர்கள், போலந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, 7 லட்சத்து 14 ஆயிரத்து 35 ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சக்திநாதன் போலீசில் புகார் அளித்ததின்பேரில், வட மாநிலத்தை சேர்ந்த நவீன், குரூப் சந்து ஆகிய இருவரையும்போலீசார் கைது செய்தனர்.