ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்

46

ஜபோர்ஜியா நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேட்டோவில் இணைய மும்முரம் காட்டி வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோர்ஜியா நகரில் அடுத்தடுத்து 7 ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் 5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமான நிலையில், ஒரு குழந்தை உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

Advertisement