ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மேலும் 15 பேர் அதிமுக-வில் இருந்து நீக்கம்

119

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மேலும் 15 பேர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், கட்சியின் விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ராஜேந்திரேன், அண்ணா தொழிற்சங்க மின்சாரப்பிரிவு பொருளாளர் மோகன் உள்ளிட்ட 15 பேர் அதிமுக-வில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து மட்டும் 5 நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.